அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வேறு வேறு கிடையாது; அனைவரும் சமம் தான்- விஜய்
சட்டப்பேரவையில் முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ வேறு வேறு கிடையாது, அனைவரும் சமம் என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, பல புதிய முகங்கள் மக்கள் பிரதிநிதிகளாகச் சட்டமன்றத்திற்குள் நுழைந்துள்ளனர். இத்தகைய சூழலில், எம்எல்ஏ.,க்களுக்கான 2 நாள் பயிற்சி முகாமை முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார். மக்கள் பிரச்சினைகளைச் சட்டமன்றத்தில் எவ்வாறு ஆக்கப்பூர்வமாகப் பிரதிபலிப்பது மற்றும் அவையின் மாண்பைக் காப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இம்முகாமின் முக்கிய நோக்கமாகும்.
இந்நிலையில் புதிய எம்.எல்.ஏக்களின் 2 நாள் புத்தாக்க பயிற்சி நிறைவு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய், சட்டப்பேரவையில் முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ வேறு வேறு கிடையாது, அனைவரும் சமம் என்றார். பயிற்சி எல்லாம் பயனுள்ளதாக இருந்ததா, துறை சார்ந்த விளக்கங்கள் எல்லாம் தெளிவாக புரிந்ததா என்றும் அமைச்சர்களிடம் முதல்வர் விஜய் தனித்தனியாக கேட்டறிந்தார். இப்பயிற்சி அனைவரும் பயனுள்ளதாக இருக்கும் என தான் நம்புவதாகவும் விஜய் பேசியதாக தெரிகிறது.