“நாம் ஆட்சிக்கு வந்தால் எல்லாருக்கும் நிரந்தர வீடு”- விஜய்யின் அசத்தல் வாக்குறுதி
Nov 23, 2025, 12:02 IST
சட்டமன்றம் தொடங்கி எல்லா இடங்களிலும் தவெக மீது அவதூறு பரப்பிவருகின்றனர் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய விஜய், “அனைவருக்கும் நிரந்தர வீடு இருக்க வேண்டும், வீட்டுக்கு ஒரு இருசக்கர வாகனம் வேண்டும். காரும்தான் லட்சியம், அதற்கான வாய்ப்பை உருவாக்குவோம். ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு நிரந்தர வேலை இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சட்டமன்றம் தொடங்கி எல்லா இடங்களிலும் தவெக மீது அவதூறு பரப்பிவருகின்றனர். அரசு மருத்துவமனைக்கு பயமில்லாமல் மக்கள் வர கூடிய அளவுக்கு அதனை மாற்ற வேண்டும். நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை தேர்தல் அறிக்கையில் விரிவாக தெரிவிப்போம்” என்றார்.