பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தி.நகரில் விஜய் ரோடு ஷோ
Apr 15, 2026, 16:19 IST
தவெக வேட்பாளர் என்.ஆனந்தை ஆதரித்து தி.நகரில் ரோடு ஷோ நடத்தினார் தவெக தலைவர் விஜய்.
தவெக வேட்பாளர் என்.ஆனந்தை ஆதரித்து தி.நகரில் ரோடு ஷோ நடத்தினார் தவெக தலைவர் விஜய். கடந்தமுறை விஜய் சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்ளும் முன் அதிகபடியான ரசிகர்கள்,அவர் வீட்டின் வெளியே சூழ்ந்திருந்த நிலையில், இம்முறை போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்தமுறை பாதுகாப்பில் குறைபாடு என தவெக குற்றஞ்சாட்டிய நிலையில், 2 உதவி ஆணையர்கள், 6 ஆய்வாளர்கள், 8 உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 50 காவலர்கள் துப்பாக்கி ஏந்தி 10 ஜீப்களில் விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.