அவசர அவசரமாக தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டது ஏன்?- முதல்வருக்கு விஜய் கேள்வி
2026 தேர்தலில் மக்கள் எழுதப் போகும் தீர்ப்பிற்கு, மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என்று இப்போதே கடிதம் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த தவெக பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய விஜய், “கரூரில் நம்ம குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்லமுடியாத வேதனையிலும் வலியிலும் இருந்தோம். அதனால்தான் அமைதி காத்தோம். வெறுப்பு அரசியல் அர்த்தமற்ற அவதூறுகள் நிறைய விஷயங்கள் நம்மைப் பற்றி பரப்பப்பட்டன சட்டம் மற்றும் சத்தியத்தை கொண்டு துடைத்து எறிய போகிறோம். தமிழக சட்டமன்றத்தில் நமக்கு எதிராக முதலமைச்சர் பேசியது எவ்வளவு வன்மம் இருக்கிறது என்பதை தமிழக மக்கள் உணராமல் இருப்பார்கள்.?
மக்கள் நெருக்கடியாக நின்று பார்க்கும் இடங்களை தான் எங்களுக்கு கொடுத்தார்கள். இந்தியாவில் எந்த ஒரு அரசியல் தலைவருக்கு கொடுக்கப்படாத நிபந்தனைகள் கட்டுப்பாடுகள் நமக்கு மட்டும் கொடுக்கப்பட்டது. நேர்மை திறனற்று அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நம்மைப் பற்றி, சட்டப்பேரணியில் குற்றம் சாட்டியுள்ள குறுகிய மனம் கொண்ட முதலமைச்சருக்கு சில கேள்விகள், கரூர் சம்பவத்திற்கு பிறகு அவசர அவசரமாக தனிநபர் ஆணையம் தனிநபர் ஆணையத்தை அவமதிக்கும் வகையில் அரசு அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்கள் ஏன் நடத்தினார்கள் எதற்காக நடத்தினார்கள் உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு திக்கித் திணறி நின்றது. கரூர் சம்பவம் குறித்து அதிகாரிகள் அவசர அவசரமாக செய்தியாளர் சந்திதனர்.
ஒரு நபர் ஆணையம் விசாரிக்கும்போதே அதனை அவமதிக்கும் வகையில் அதிகாரிகள் பேட்டியளித்தனர். ஆனால் அந்த தனி நபர் ஆணையத்தையே உச்ச நீதிமன்றம் தலையில் கொட்டி அனுப்பிவிட்டது என்பது தனி விஷயம். இதையெல்லாம் முதல்வர் மறந்துவிட்டாரா?முதலமைச்சர் சட்டமன்றத்தில் பேசியது வடிகட்டிய பொய் சப்பை கட்டிகள் என உச்ச நீதிமன்றமே சுட்டிக்காட்டி உள்ளது! உச்சநீதிமன்றத்திற்கு மட்டுமல்ல மக்களுக்கும் இந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை மண்ணில் புதைந்து விட்டது. 2026 சட்டமன்ற தேர்தலில் இன்னும் ஆழமாக அழுத்தமாக மக்கள் புரிய வைப்பார்கள், 2026 தேர்தலில் மக்கள் எழுதப் போகும் தீர்ப்பிற்கு, மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என்று இப்போதே கடிதம் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.