×

'வெற்றித்தறி' விற்பனை நிலையம்- நாளை விஜய் தொடங்கிவைக்கிறார்

 

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள "வெற்றித் தறி" விற்பனை நிலையங்களை நாளை (ஆகஸ்ட் 7) முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

12வது தேசிய கைத்தறி நாளை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள "வெற்றித் தறி" விற்பனை நிலையங்கள் மற்றும்  மின் வணிகத்தளம் ஆகியவற்றை முதலமைச்சர் விஜய் சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார். குறிப்பிட்ட சில பொருட்கள் மட்டும் கிடைக்கும் வகையில் (Elite Boutique Model) அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கோ- ஆப்டெக்ஸ் இணையதளம் ஏற்கனவே செயல்பட்டு வரும் நிலையில், புதிய இணையத்டை முதலமைச்சர் விஜய் நாளை திறந்துவைக்கிறார். இந்தப் புதிய விற்பனையகம், தற்போதுள்ள 'கோ-ஆப்டெக்ஸ்' (Co-optex) விற்பனையகங்களின் பிரீமியம் மற்றும் உயர்தரப் பதிப்பாகச் செயல்படும். இதனை தொடர்ந்து மாநில அளவில் சிறந்த நெசவாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கான விருதுகளையும் வழங்கி கௌரவிக்கிறார்.

தமிழக நெசவாளர்களின் தயாரிப்புகளை சர்வதேச அளவில் நேரடியாக விற்பனை செய்வதற்கு பிரத்தியேகமான இ-காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும். ஒவ்வொரு முக்கிய நகரத்திலும் வெற்றித் தறி ஷோரூம்கள் அமைக்கப்படும் என தவெக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது குறிப்பிடதக்கது.