'ஆண்டவன் மீது ஆணையிட்டு'... என பதவியேற்பது சரியா? முறையா?
'ஆண்டவன் மீது ஆணையிட்டு' என்று கூறி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார் தவெக தலைவர் விஜய்.
`ஆண்டவன் மேல் ஆணையிட்டு’ பதவியேற்பது பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே தொடரும் நடைமுறைதான். ஆனால் அதனை சுதந்திர இந்தியாவில் இதனை முதன் முதலில் மாற்றியவர் பேரறிஞர் அண்ணா. பகுத்தறிவு கொள்கை கொண்ட அவரும் அவரின் அமைச்சரவையும் 1967ல், `உளச்சான்றின்படி உறுதியளிக்கிறேன்' என பதவியேற்றது. அதன் பின் அவர் கொள்கையை பின்பற்றி வந்த கருணாநிதி, எம்ஜிஆர் என அனைவரும் `உளப்பூர்வமாக’ அல்லது `உளமார’ போன்ற வார்த்தைகளையே பயன்படுத்தினர்.
1991ல் இந்த நடைமுறையை உடைத்து, `ஆண்டவன்’ பெயரால் பதவியேற்றார் ஜெயலலிதா. அதே மேடையில் சீனியரான நாவலர் நெடுஞ்செழியன் `உளமார’ உறுதி ஏற்றது பெரும் பேசுபொருளானது. ஜெயலலிதா வழிவந்த ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் போன்றவர்களும் `ஆண்டவன்’ என்ற பதத்தையே பதவியேற்கும் போது பயன்படுத்தினர். 2021ல் மு.க.ஸ்டாலின், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் வழியில் `உளமார' என்றே பதவியேற்றார். தற்போது `ஆண்டவன் மேல் ஆணையிட்டு' என்றே பதவியேற்றிருக்கிறார் தவெக தலைவர் விஜய்