×

தவெக நிர்வாகிகள் கைது- விஜய் ஆலோசனை

 

சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.


கரூரில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக்கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு இதில் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தலா ரூ. 20 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். 

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பின்னர் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை குறித்து மேலாளர், அரசியல் ஏற்பாட்டாளர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.