ராகுல் காந்தியை சந்தித்தார் விஜய்!
Jun 10, 2026, 19:25 IST
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள முதல்வர் விஜய், குடியரசுத் தலைவரை சந்தித்தார். பின்னர் மரியாதை நிமித்தமாக குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனையும் சந்தித்தார். இதனையடுத்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்தார் முதலமைச்சர் விஜய். கடந்த முறை சந்திப்பு நடைபெறாத நிலையில், இந்த முறை காங்கிரஸ் தலைவர்கள் உடனான சந்திப்பு நடந்துள்ளது.