“யாருடனும் கூட்டணி இல்லை! தவெக தலைமையில் ஆட்சி”- விஜய்
நாம் அரசியலுக்கு வந்ததில் இருந்தே நம்மைப் பற்றி சில வதந்திகள். இவர் அந்த டீம் இந்த டீம் என்று சொன்னார்கள். ஆனால் நாம் எந்த டீமும் இல்லை. மக்களின் டீம் என்று தெரிந்துவிட்டது என தவெக தலைவர் விஜய் கூறினார்.
சென்னையில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் உரையாற்றிய விஜய், “நாம் அரசியலுக்கு வந்ததிலிருந்தே நம்மை ‘இந்த டீம், அந்த டீம்’ என்று வதந்திகளைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், நாம் எந்த டீமும் கிடையாது; மக்களுடைய டீம் என்று தெரிந்த பின்னர் நம் மீது வேறு என்ன அவதூறு பரப்பலாம் என்று பார்த்தார்கள். அதெல்லாம் ஒர்க் அவுட் ஆகவில்லை. அதனால் கடைசியாக ‘இந்தக் கூட்டணியில் சேரப் போகிறார்; அந்தக் கூட்டணியில் சேரப் போகிறார்’ என்ற பொய்யான பிரச்சாரத்தை செய்தார்கள். இந்த செய்தியெல்லாம் கேட்டு நீங்கள் குழம்பியிருப்பீர்கள். நாம் எப்போதும் மதச்சார்பற்ற சமூகநீதி என்ற நிலைப்பாட்டில் சமரசம் வைத்துக்கொள்ள மாட்டோம். நம்முடைய தலைமையில்தான் ஆட்சி என்று உறுதியாக இருக்கிறோம். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நாம் நினைத்த இலக்கை அடைவோம்” என்றார்.