×

விஜய் மும்பைக்கு திடீர் பயணம்?

 

தனி விமானத்தில் இன்று இரவு 7 மணிக்கு மும்பை செல்கிறார் தவெக தலைவர் விஜய்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மும்பையில் நடைபெறும் தன்னுடைய நண்பர் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம் மும்பை செல்கிறார். அதன்பின் ஜனநாயகன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணியையும் அங்கு மேற்கொள்ளவுள்ளார். ஜனநாயகனுக்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கும் நிலையில் விஜய் மும்பைக்கு செல்கிறார். ஜனநாயகனில் சில மாற்றங்கள் செய்ய இருப்பதால் புதிதாக சில காட்சிகளை எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளது. படத்திற்கான சில காட்சிகளை ஷூட் செய்வதற்காக விஜய் மும்பைக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.