மாநாட்டுக்காக மதுரை சென்றார் விஜய்
ஆக.21 ஆம் தேதி தவெக மாநாடு நடைபெற உள்ள நிலையில், மதுரை சென்றடைந்தார் தவெக தலைவர் விஜய்.
மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தியில் மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டு பணிகள் குறித்து இன்று மாலை நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இதற்காக சற்றுமுன் மதுரை சென்றடைந்தார் தவெக தலைவர் விஜய். தவெக மாநாட்டின் பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார் ஈடுபடவுள்ளனர். 10 மாவட்ட எஸ்பிக்கள், 2 காவல் ஆணையர்கள், 35 டிஎஸ்பிக்கள், 80 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் வழங்குவதற்காக 5 லட்சம் ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் பாட்டில்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் ஒன்றரை லட்சம் தொண்டர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.