×

ஈரோட்டில் பரபரப்பு! விஜய் பிரச்சார மாநாட்டு பணிக்கு வந்தவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

 

விஜய் பிரச்சார மாநாட்டு பணிக்காக வந்த நபர் திடீரென மயங்கி விழுந்தார்.

கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் முதல் முறையாக வெளியே (open ground) நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் நாளை விஜய் பங்கேற்கிறார். கே ஏ செங்கோட்டையன் இணைந்ததற்குப் பிறகு மேற்கு மாவட்ட பகுதியில் நடைபெறும் இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி செல்வாக்கை நிரூபிக்க செங்கோட்டையன் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில் 16 ஏக்கர் பரப்பளவில் இதற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த ஏற்பாடு பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் விஜய் பேருந்து நிற்கும் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர் ஒருவர் திடீரென உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்த நிர்வாகிகள உடனடியாக மீட்டு அழைத்துச் சென்றனர், அதனை புகைப்படம் எடுக்க விடாமல் தடுத்தனர்.