மதுவுடன் கார் ஓட்டினாரா முதல்வர் விஜய்?- சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் காணொளி
மங்களூருவுக்கு சென்றபோது, முதலமைச்சர் விஜய் கார் ஓட்டி சென்ற காணொளியில், அவருக்கு அருகே ஒரு டம்பளரில் மது இருப்பது போன்ற காணொளி வைரலாகிவருகிறது.
டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவிட்டு கர்நாடக மாநிலம் மூகாம்பிகை கோவிலுக்கு சென்றார். அங்கே சென்றுவிட்டு வரும்போது முதல்வர் விஜய் கார் ஓட்டினார். பக்கத்தில் ப்ளாஸ்டிக் டம்ப்ளரில் ஐஸ் கட்டிகளுடன் பானம் இருந்தது. அது குளிர்பானம் என்றால் பட்டிலில் அல்லவா இருந்திருக்கும்! அது மது என சமூக வலைதளங்களில் செய்தி பரவுகிறது.
பொட்டு மாமா காரில் உள்ள பிளாஸ்டிக் கப்பில் என்ன இருக்கிறது?
— ஜெயராமன் திமுக (@jayaraman418) June 15, 2026
விசாரணை தேவை?? pic.twitter.com/VdKxh7c85Q
ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறாரே என்று பஞ்சாயத்து கிளம்பிவரும் சூழலில், முதல்வர் இறை வழிபாட்டுக்கு சென்றுள்ளார். அப்போது மது அருந்துவதை யாரும் விரும்பமாட்டார்கள் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் தவெகவை சேர்ந்த விர்ச்சுவல் வாரியர்ஸ், அந்த கிளாஸில் இருக்கும் திரவம் மது என்று எப்படி உங்களுக்கு உறுதியாக தெரியும்?.. ஒருவேளை அது ஜூஸாக கூட இருக்கலாமே. அல்லது வேறு எதுவாகவோ இருக்கலாம். எதையும் குற்ற கண்ணோடு பார்த்தால் ஒன்றும் செய்ய முடியாது என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். மற்றொருபுறம் ’தனி மனித ஒழுங்கு’ என பாடம் எடுத்த முதலமைச்சர், போக்குவரத்து விதியைக் கூட மதிக்காமல் நடந்து கொண்டதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.