×

“ஸ்டாலின் சார், ஏண்டா விஜய்யை தொட்டோம் என்று வருந்துவீர்கள்”- விஜய்

 

தேர்தலில் எனக்கு ஒரே ஒரு வாய்ப்பை தாருங்கள், வரும் தேர்தல் ஒரு விசில் புரட்சியாக இருக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறும் தவெக கூட்டத்தில் உரையாற்றிய விஜய், “தேர்தலில் தவெக-திமுக இடையேதான் போட்டியே... நீங்கள்தான் எனக்கு தேர்தலில் நீதி வழங்க வேண்டும். தேர்தலில் எனக்கு ஒரே ஒரு வாய்ப்பை தாருங்கள், வரும் தேர்தல் ஒரு விசில் புரட்சியாக இருக்க வேண்டும்.  ஸ்டாலின் சார், தேர்தலில் நீங்கள் அடையும் தோல்விக்கு பிறகு ஏண்டா விஜய்யை தொட்டோம் என்று வருந்துவீர்கள்... மாற்றி மாற்றி வாக்கு செலுத்துவது மாற்றமில்லை. புதியதாக ஒருவரை கொண்டுவருவதுதான் மாற்றம். ஒட்டுமொத்தமாக எல்லோரும் சேர்ந்து ஒருவனை எதிர்க்க காரணம் எல்லோரும் ஒரே கூட்டணியில் உள்ளனர். ஏப்ரல் 23ஆம் தேதி நான் சொல்வதை ஒரே ஒருமுறை செய்யுங்கள் அதற்கு அப்புறம் ஐந்து வருடங்கள் நீங்கள் சொல்வதை முழுவதுமாக நான் கேட்பேன். கரூரில் எந்த தவறும் செய்யவில்லை என்றால் உங்கள் அடிமையை கரூரில் இருந்து ஏன் கோவைக்கு அனுப்பினீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.