×

பெரம்பூரில் நாளை விஜய் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க திட்டம்

 

நாளை பெரம்பூர் தொகுதியில் விஜய் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க திட்டமிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில், த.வெ.க. தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளுக்கு கூடுதல் ஸ்பெஷலாக மாதம் ஒருமுறை வருவேன், மக்கள் என்னை சுலபமாக சந்திக்கலாம் என விஜய் கூறியிருந்தார்.

இந்நிலையில் நாளை பெரம்பூர் தொகுதியில் விஜய் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க திட்டமிட்டுள்ளார். அண்ணா சாலை, டி.எச்.சாலை, நேரு நகர், எருக்கஞ்சேரி பிரதான சாலையிலும் நாளை விஜய் பிரச்சாரம் செய்கிறார். பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் விஜய்க்கு தேர்தல் ஆணையம் மின்னணு இயந்திரத்தில் வரிசை எண் 16 என்று ஒதுக்கியுள்ள நிலையில் 16ஆவது எண்ணில் மேற்கொண்ட யாரும் போட்டியிடவில்லை என கூறி துண்டு சீட்டு வினியோகித்த நபரை பிடித்து தேர்தல் நடத்து அலுவலரிடம் ஒப்படைத்த த.வெ.க தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.