விஜய் பரப்புரையில் மயங்கிய பெண்- மருத்துவமனையில் அனுமதி!
சென்னை நுங்கம்பாக்கத்தில் விஜய் பரப்புரையில் பெண் ஒருவர் மயங்கி விழுந்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்னையில் தி.நகர், ஆயிரம் விளக்கு, எழும்பூர் ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். முதலில் தன்னுடைய கட்சி சார்பில் தி.நகரில் போட்டியிடும் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பின்னர் எழும்பூர் தொகுதி வேட்பாளர் ராஜ்மோகனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். விஜயை காண சாலையின் இரு புறங்களிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் விஜய் பரப்புரையில் பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை தவெக தொண்டர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விஜயின் வாகனத்தை நோக்கி பலரும் நெருங்கி வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது.