×

நாளை தி.நகரில் விஜய் பிரசாரம்

 

தி.நகரில் தவெக தலைவர் விஜய் நாளை மதியம் 2 மணிக்கு மேல் பிரசாரம் நடத்த விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகள் என இரண்டு இடங்களில் நடிகர் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். எடப்பாடி தொகுதியை தவிர மீதமுள்ள 233 தொகுதிகளிலும் அக்கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக விஜய் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்துவருகிறார்.

சென்னை தி.நகரில் தவெக தலைவர் விஜய் நாளை மதியம் 2 மணிக்கு மேல் பிரசாரம் நடத்த விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி, எழும்பூர் ஆகிய இடங்களிலும் பிரசாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தவெக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து நாளை விஜய் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.