கட்டுக்கடங்காத கூட்டத்தால்... புரசைவாக்கத்தில் விஜய் பிரச்சாரம் ரத்து
Apr 15, 2026, 18:31 IST
சென்னை புரசைவாக்கத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மேற்கொள்ளவிருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.
சென்னை தியாகராய நகர், வள்ளுவர் கோட்டம், எழும்பூர் சட்டமன்ற தொகுதி உள்ளிட்ட பகுதிகளில் விஜய், இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அதிக கூட்டம் காரணமாக சென்ட்ரலில் இடதுபுறம் திரும்புவதற்கு பதிலாக நேராக சென்றார். அதனால் சென்னை புரசைவாக்கத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மேற்கொள்ளவிருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. இரவு 8 மணி வரை பரப்புரைக்கு அனுமதி பெற்றிருந்த விஜய், திடீரென 6.10 மணிக்கே பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பினார்.