காலை முதல் தீவிர பிரச்சாரம்... பிரச்சாரத்தில் தடுமாறிய விஜய்- பதறிய பவுன்சர்
சென்னை அண்ணா நகரில் பிரச்சார வாகனத்தை விட்டு கீழே இறங்க முயற்சி செய்த விஜயை ரசிகர்கள், தொண்டர்கள் சூழ்ந்ததால் மீண்டும் வாகனத்துக்குள்ளே சென்றுவிட்டார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பரப்புரை மேற்கொள்ள நாளை கடைசி நாள் என்பதால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் வாக்கு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று சென்னை வில்லிவாக்கம் , அண்ணா நகர் , விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் ரோட் ஷோ மேற்கொண்டார். மதியமுதலே விஜய் பரப்புரை மேற்கொள்ள வரும் இடங்களில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் தொண்டர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் காத்துக் கொண்டிருந்தனர். விஜய் பேசுவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் எந்த இடத்திலும் விஜய் பரப்புரை பிரச்சாரம் மேற்கொள்ளாததால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.