×

விஜய்யின் பெயரில் கடனா? -  பிரமாண பத்திரத்தில் வெளியான தகவல்

 

விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு?, என்னென்ன பொருட்கள் உள்ளன என்பது போன்ற தகவல் அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

  • த.வெ.க. தலைவர் விஜய்யின் அசையும் சொத்து மதிப்பு ரூ.404 கோடி
  • வேட்பு மனுவில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் விஜய் தகவல்
  • விஜய்யின் மனைவி பெயரில் ரூ.15 கோடி மதிப்பில் அசையும் சொத்துக்கள்
  • ரூ.115 கோடி அசையா சொத்துக்கள் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் விஜய் தகவல்
  • பெரம்பூர் தொகுதியில் போட்டியிட விஜய் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தகவல்
  • 2 பிஎம்டபிள்யு, லெக்சஸ், டோயட்டோ வெல்பயர் உள்ளிட்ட கார்கள் சொந்தமாக இருப்பதாக விஜய் தகவல்
  • தனது பெயரில் ரூ.1.20 கோடி மதிப்பிலான 883 கிராம் தங்கம் இருப்பதாக விஜய் தகவல்
  • விஜய் மனைவி சங்கீதா பெயரில் 3 கிலோ தங்க நகைகள் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தகவல்
  • 135 காரட் வைர நகைகள் சங்கீதா பெயரில் இருப்பதாக தகவல்
  • விஜய்யின் பெயரில் கடன் ஏதும் இல்லை என்றும் பிரமாண பத்திரத்தில் தகவல்
  • பூர்வீக சொத்தின் மதிப்பு 21.83 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது