#BREAKING விஜய் அதிரடி அறிவிப்பு- அஜிதாவுக்கு பெரும் ஷாக்
தவெகவின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலராக சாமுவேல் என்பவரை நியமனம் செய்து அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி மத்திய மாவட்டத்துக்கு சாமுவேல் என்பவர் தவெக மா.செவாக நியமிக்கப்படவிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. சாமுவேலின் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியை சேர்ந்த பெண் நிர்வாகி தன்னுடைய ஆதரவாளர்களுடன் பனையூர் வந்து சேர்ந்தார். அவரை தவெகவின் அலுவலகத்துக்கு அரை கிலோ மீட்டருக்கு முன்பாகவே பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். அவர்களை கலைந்து போகுமாறும் அறிவுறுத்தினர். இதனையடுத்து விஜய் வந்த காரை அஜிதா நிறுத்த முயன்றார், ஆனால் கார் வேகமாக சென்றுவிட்டது. தவெகவில் பொறுப்பு வழங்குமாறு தூத்துக்குடியை சேர்ந்த அஜிதா, தனது ஆதரவாளர்களுடன் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் விஜய் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தவெகவின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலராக சாமுவேல் என்பவரை நியமனம் செய்து அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தன்னை மத்திய மாவட்ட செயலாளராக நியமிக்கக்கோரி அஜிதா ஆக்னல் போராட்டம் நடத்திவரும் நிலையில், அறிவிப்பு வெளியாகியுள்ளது.