×

வெறி நாய்க்கடி உயிரிழப்புகள் இருக்கவே கூடாது- முதல்வர் விஜய் உத்தரவு 

 

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், வெறி நாய்க்கடியால் ஏற்படும் உயிரிழப்புகள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டுமென  உத்தரவிட்டுள்ளார். மேலும் மாநகராட்சி, நகராட்சிகளில் 2031ஆம் ஆண்டுக்குள் விலங்கு பிறப்பு கட்டுப்பாடு மையங்கள் நிறுவ வேண்டும், அனைத்து மாநகராட்சிகளிலும் 100% குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை வழங்க வேண்டும், சென்னை கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும், 25 மாநகராட்சிகளிலும் 24மணிநேரமும் தடையற்ற குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.