பிரபல தொழிலதிபரை சந்தித்த தவெக நிர்வாகி! திருமண நிகழ்ச்சியில் நடந்த அரசியல் உரையாடல்?
சென்னையில் நடந்த திருமண விழாவில் தொழிலதிபர் மார்ட்டின், தவெக பொருளாளர் வெங்கடரமணன் ஆகியோர் சந்தித்து உரையாடினர்.
சென்னையில் தொழிலதிபர் ரகு - இந்துமதி ஆகியோரின் மகள் டாக்டர் அக்ஷயாவுக்கும், நாகர்கோவிலைச் சேர்ந்த தொழிலதிபர் கோகுல் - ராஜேஸ்வரி ஆகியோரின் மகன் டாக்டர் அக்ஷய்க்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின், தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளர் வழக்கறிஞர் பி.வெங்கடரமணன் உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
இதையடுத்து நிகழ்ச்சியின் போது தொழிலதிபர் மார்ட்டின், தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளர் வழக்கறிஞர் பி.வெங்கடரமணன் சந்தித்து சில நிமிடங்கள் பேசினர். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றாலும், அரசியல் சந்திப்பாக இருக்கக்கூடும் என்று பேசப்படுகிறது.