இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை- தவெக ஒன்றிய செயலாளர் கைது
Updated: Jun 18, 2026, 18:16 IST
திருவாரூரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதல்வர் விஜய்யின் ஆளும் தமிழக வெற்றிக்கழகத்தை சேர்ந்த ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில், தனது தந்தையின் வருகைக்காகக் காத்திருந்த 27 வயது இளம்பெண்ணிடம், தமிழக வெற்றிக் கழகத்தின் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் அசோக் ஆகியோர் இரட்டை அர்த்த வசனங்களுடன் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. திருவாரூரில் பேருந்திற்காக காத்திருந்த இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய தவெக செயலாளர் ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோல் அவருடைய நண்பர் அசோக்கும் கைது செய்யபட்டு, அவர் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.