×

“ஊழல் இலக்கியமே! ஃபோன் வயர் எப்பவோ அறுந்து போச்சு”- தவெக விமர்சனம்

 

கட்சியின் பெயரைக் கூட குறிப்பிடாமல், “ஊழல்” என்று ஒரு வார்த்தை சொன்னாலே, “எங்க அப்பன் குதிருக்குள் இல்லை” என்பது போல் திமுகவினருக்குப் பதற்றம் தொற்றிக்கொள்கிறது என தவெக விமர்சித்துள்ளது.

இதுதொடர்பாக தவெக தனது எக்ஸ் தளத்தில், “கட்சியின் பெயரைக் கூட குறிப்பிடாமல், “ஊழல்” என்று ஒரு வார்த்தை சொன்னாலே, “எங்க அப்பன் குதிருக்குள் இல்லை” என்பது போல் திமுகவினருக்குப் பதற்றம் தொற்றிக்கொள்கிறது! உரிமம் வழங்குவதில் முறைகேடு நடந்ததா இல்லையா என்று பதில் சொல்லாமல், “ஊழல் என்று ஏன் இடைச்செருகல் செய்கிறீர்கள்?” என்று அலறுகிறார்கள்! ஏன் இந்தப் பதற்றம்?

ஊழல் செய்யவில்லையெனில், “அப்படி எதுவும் நடக்கவில்லை” என்று மறுத்துவிட்டுப் போக வேண்டியதுதானே? அதை விடுத்துப் பதறுகிறீர்கள் என்றால்… அந்த வார்த்தை எங்கே குத்துகிறது என்பதை மக்களால் புரிந்துகொள்ள முடியும்!ஊழல் இலக்கியமே! ஃபோன் வயர் எப்பவோ அறுந்து போச்சு!” எனக் குறிப்பிட்டுள்ளது.