தவெக திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி மாரடைப்பால் மரணம்
Mar 15, 2025, 13:12 IST
தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில், தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற் கட்சியை தொடங்கி தீவிரமாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழக வெற்றி கழகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக கட்சியின் பொதுக்குழு வருகிற 28ம் தேதி கூடுகிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
கட்சி பணிகளுக்காக சென்னை வந்திருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி மறைவால் அக்கட்சி தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.