×

“திருமண வீட்டில் ஒரேயடியா ஒப்பாரியா வச்சு கதறி அழலாமா ஒப்பாரிநிதி அவர்களே?”- தவெக விமர்சனம்

 

டீம்கா ஆட்சியில இருந்தப்ப உதவாநிதிக்கு படப்பட்டியல் போட்டு பாடாவதி திணை பாடிய சித்தரஞ்சன்சாலையின் சின்சியர் கொத்தூஸ்கள் செய்தது எல்லாம் மறந்து விட்டதோ? என தவெக கேள்வி எழுப்பியுள்ளது.

சட்டப்பேரவையை சினிமா ஷூட்டிங் ஸ்பாட் போல மாற்றிவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் விமர்சித்த நிலையில்,தவெக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில், “திருமணம் நடக்கற இடம் மக்கள் எல்லாரும்  சந்தோசமா இருக்கற இடம். அங்க போயி மணமக்கள வாழ்த்திட்டு ஓரளவுக்கு அரசியல் பேசினா பரவால்ல. ஒரேயடியா ஒப்பாரியா வச்சு கதறி அழலாமா ஒப்பாரிநிதி அவர்களே?.டீம்கா ஆட்சியில இருந்தப்ப உதவாநிதிக்கு படப்பட்டியல் போட்டு பாடாவதி திணை பாடிய சித்தரஞ்சன்சாலையின் சின்சியர் கொத்தூஸ்கள் செய்தது எல்லாம் மறந்து விட்டதோ?. அதனால்தான் இப்போது எதுக்கெடுத்தாலும் சினிமா சினிமா, ஷூட்டிங் ஷூட்டிங்னு ஒரே புலம்பலாவே இருக்கே. மிஸ்டர் ஒப்பாரிநிதி,  அஞ்சு வருசமா சினிமாவை சுருட்டி வச்சிருந்த சிவப்பு பூதம் இப்ப எதோ சித்தாந்தம் பேசுற மாதிரி பேசினா சிப்பு சிப்பா வருது பாஸ்.

திருமணம் நடக்கற இடம் மக்கள் எல்லாரும் சந்தோசமா இருக்கற இடம். அங்க போயி மணமக்கள வாழ்த்திட்டு ஓரளவுக்கு அரசியல் பேசினா பரவால்ல. ஒரேயடியா ஒப்பாரியா வச்சு கதறி அழலாமா ஒப்பாரிநிதி அவர்களே?.

டீம்கா ஆட்சியில இருந்தப்ப உதவாநிதிக்கு படப்பட்டியல் போட்டு பாடாவதி திணை பாடிய… pic.twitter.com/p0NW6hy723

— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) June 28, 2026


சரி...மக்கள் மேல, இளைஞர்கள் மேல,பெண்கள் மேல...ஏன் குழந்தைகள் மேலக்கூட வன்மத்த கொட்டின நீங்க இப்ப சினிமா மேலயும் கொட்ட ஆரம்பிச்சது ஏன்?. சிவப்பு பூதம் சிதைஞ்சிடுச்சா பாஸ்?. இனி சினிமாவ வச்சும் காசு பாக்க வழியில்லன்னு வயித்தெரிச்சலா?.போங்க பாஸ். எதாவது ஃபாரீன்ல போயி டீம்கா பிராஞ்ச் ஓப்பன் பண்ற பிஸ்னஸ பாருங்க” எனக் குறிப்பிட்டுள்ளது.