திமுகவினருக்கு தான் நாட்கள் எண்ணப்படுகின்றன - செங்கோட்டையன்
ஆர்.எஸ்.பாரதி சொல்வதுபோல் தவெக ஆட்சிக்கு அல்ல, திமுகவுக்குதான் நாட்கள் எண்ணப்படுகின்றன என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “பல கட்சிகள் தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியில் இணையும். ஆர்.எஸ்.பாரதி சொல்வது போல், ஆட்சிக்கு நாட்கள் என்ன படவில்லை. திமுகவினருக்கு தான் நாட்கள் எண்ணப்படுகின்றன. தவெக கூட்டணியில் கம்யூனிஸ்ட் இணைவார்களா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று மக்கள் விஜய்யை முதல்வராக்கி உள்ளனர். தமிழகத்தில் புதிய மாற்றத்தை கொண்டு வந்த விஜய் இருக்கும் வரை அவர்தான் நிரந்தர முதல்வர். இடைத்தேர்தலில் தவெக 100% வெற்றி வாய்ப்பை பெறும். மற்ற கட்சிகள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை தேர்தல் முடிவில் தெரிந்துகொள்வீர்கள். பட்டினப்பாகத்தில் தலைமைச்செயலகம் அமைப்பது தொடர்பாக பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டாலும், அதுகுறித்த இறுதி முடிவை முதலமைச்சரே எடுப்பார்.