×

வெற்றி வேட்பாளர்களை பனையூருக்கு விஜய்  வர சொன்னது ஏன்?- செங்கோட்டையன் விளக்கம்

 

சுயநலமும், கர்வமும் கொண்ட இயக்கத்தின் சாம்ராஜ்யம் அழியும் என்று கே.ஏ.செங்கோட்டையன் அதிமுகவை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக வெற்றிக்கழகம் தியாகத்தால் உருவாக்கப்பட்ட இயக்கம். மனித நேயத்தோடு இயங்குகிறது தொலைநோக்கு சிந்தனையோடு மக்களுக்கு பணியாற்றக்கூடிய தலைவராக விஜய் உள்ளார் நாளை தமிழகத்தை அவர் ஆளப்போகிறார் நாளைய சரித்திரம் சொல்லும்  இந்த தேர்தல் வெற்றி என்பது சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய வரலாறாக அமையும்.  இந்தியாவே வியக்கும் தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ்கின்ற காலமாக இது அமையும் அத ற்காக மனித நேயத்தோடு இந்த இயக்கத்தை விஜய் உருவாக்கி  வழிநடத்தி செல்கிறார் பல்வேறு சோதனைகளை கடந்து சாதனை படைப்பதற்காக இரவு பகல் பாராமல் எதிர்ப்புகளை தாண்டி தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் வீர நடை போட்டுக் கொண்டிருக்கின்றார் காலம் நான்காம் தேதி பதில் சொல்லும். சரித்திர வரலாற்றில் இந்தியாவின் முதல் இடத்தை பெறக்கூடிய தலைவராக விஜய் இருப்பார். சர்வத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும், ஆனால் கர்வத்தையும் சுயநலத்தையும் கற்றுக் கொள்கின்ற எந்த இயக்கமாக இருந்தாலும் ராஜ்ஜியம் அழிவதை எவராலும் தடுக்க முடியாது” என்றார்.

தேர்தல் கருத்துக்கணிப்புகள் பெரும்பான்மை திமுக வெற்றி பெறும் என சொல்லி இருக்கின்றனவே.? என்ற கேள்விக்கு, மக்கள் கருத்துக்கணிப்பு தெளிவாக இருக்கிறது, ஒவ்வொரு வீட்டிலும் விசிலுக்கு ஓட்டு போட்டு இருக்கிறார்கள். வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகள் முதல் புதிய மாற்றத்தை  எதிர்பார்க்கிறார்கள்.  மக்களின் மனநிலை நான்காம் தேதி பிரதிபலிக்கும். இந்திய சரித்திர வரலாற்றில் வெற்றி என்பதை எட்டிப் பிடிப்பார். நயினார் நாகேந்திரன் தவெக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என  சொல்லி இருக்கிறாரே..?  நயினார் நாகேந்திரனுக்கு இதுதான் இறுதித் தேர்தல், இதற்குப் பிறகு கட்சிப் பதவி அவருக்கு இருக்குமா என்பதை மேலிடம் சொல்லும். இளையராஜா விஜயின் பாடலை பதிவாக வெளியிட்டுள்ளார். அனைவரும் மனம் திறந்து விஜய் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த இசைத் தட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இது மக்களின் பிரதிபலிப்பு. தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவை பட்டியல் வெளியாகியிருப்பது? அன் அபிஷியல் அது பற்றி கேட்கக் கூடாது.


வெற்றி பெறக்கூடிய தவெக வேட்பாளர்கள் பனையூர் வரவேண்டும் என விஜய் கூறியிருக்கின்றாரே.? என்ற கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையன், இது அனைத்து கட்சிகளும் செய்யக்கூடிய ஒரு செயல்தான். நாங்கள் ஏற்கனவே ரிசார்ட்டில் 22 நாட்கள் இருந்திருக்கின்றோம், அந்த மாதிரி சென்று விடக்கூடாது என்பதற்காக அல்ல, எங்களிடம் இருப்பவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். தெளிவாக மட்டுமல்ல, விஜய்க்காக உயிரையும் தியாகம் செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள். இது உலக வரலாற்றில் முன்னாள் இருந்த இரண்டு தலைவர்களுக்கு பிறகு தற்போது அவரை பார்க்கின்றேன். வைகோ உண்மையில் மனம் திறந்து பேசி இருக்கிறார், அவருக்கு பாராட்டுக்கள். பெரும்பான்மையுடன் 180 முதல் 200 தொகுதிகளில் தவெக வெற்றி பெறும். அதுதான் தமிழ்நாட்டின் இலக்காகவும் மக்களின் மனநிலையாகவும் இருக்கிறது.  இதுவரை காணாத காட்சி வியக்கத்தக்கதாக இருக்கிறது” என்றார்.