"200 இடங்கள் வென்று விஜய் தான் தமிழகத்தை ஆள்வார்"- செங்கோட்டையன்
தமிழகத்தில் விசில் புரட்சி நடக்கும், 200 இடங்கள் வென்று விஜய் தான் தமிழகத்தை ஆள்வார் என செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், “கருத்துகணிப்பு குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
தந்தி ஆன்லைன் நடத்திய கருத்து கணிப்பில் 250808 பேரிடம் கருத்து கணிப்பு எடுத்து இருக்கிறார்கள், ஆன்லைன் மூலம் நடத்தி அவர்கள் கொடுத்த ரிசல்ட்டில் தவெக 120 தொகுதிக்கு மேல் வரும் என சொல்லி இருக்கிறார்கள், மற்றவர்கள் அதற்கு கீழே இருக்கும் என சொல்லி இருக்கின்றார்கள்.
இலங்கை, நேபாளம், பங்களா தேசம், பஞ்சாப் என அனைத்து இடங்களிலும் கருத்துக் கணிப்புகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கருத்து கணிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட பேர் குறிப்பிட்டு சொல்வது.
மக்கள் அலை. இதுவரை தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல , இந்திய வரலாற்றில் இல்லாதபடி இருக்கும், பசுமை புரட்சி , வெண்மை புரட்சி, இன புரட்சி , சோசலிச புரட்சி வரிசையில் அடுத்ததாக
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விசில் புரட்சிதான் உலக அளவில் தெரியப்போகிறது. 200 இடங்களில் வெற்றி பெறுவார் அவர் தான் தமிழகத்தை ஆள்வார், இது மக்களால் தீர்மானிக்கப்பட்டுள்ள ஒன்று. கருத்துக்கணிப்பு பெரிய சேனல்கள் யார் எடுத்திருக்கிறார்கள்? டைம்ஸ் நவ் சேனலுக்கு எங்களை பிடிக்காது” என்றார்.