×

விஜய் ஏன் பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை? - செங்கோட்டையன் பதில்

 

விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுப்பது ஏன் என்ற கேள்விக்கு, அதற்கான நேரம் வர வேண்டும் என தவெக நிர்வாகி செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தவெக தலைவர் விஜய் பெருமநல்லூரில் பரப்புரையை முடித்துவிட்டு, கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்டுச் சென்றார். அப்போது அக்கட்சி நிர்வாகி செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சித் தலைவருக்கும் இல்லாத வரவேற்பு விஜய்க்கு உள்ளது. இதனால் மாற்றுக் கட்சிகள் அஞ்சி நடுங்கி வருகின்றன. மேலும், விஜய் கை காட்டும் நபர் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார். தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டிய நேரம் வர வேண்டும். அது எப்போது வேண்டுமானாலும் வரலாம். நல்ல பதில்களைச் சொல்லும் நேரம், மக்களை நேசிக்கும் நேரத்தில் தான் சந்திக்க முடியும். அதைவிட்டுவிட்டு, கம்பராமாயணம் எழுதியது சேக்கிழார் என்று சொல்ல முடியாது” என்று மறைமுகமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தாக்கிப் பேசினார்.