×

கூட்டணி வைத்து மற்றவரை முதலமைச்சராக்க நாங்க என்ன இளிச்சவாயர்களா?- செங்கோட்டையன் 

 

234 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிட்டு ஆட்சி அமைக்கும் என தவெக நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “234 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிட்டு ஆட்சி அமைக்கும். 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை கண்டுபிடிக்கும் பணியில் கட்சி ஈடுபட்டுள்ளது. கூட்டணி பற்றிய தகவல்கள் முற்றிலும் தவறானது. கூட்டணி வைத்து மற்றவரை முதலமைச்சராக்க நாங்கள் என்ன இளிச்சவாயர்களா? 

தவெகவில் இணைந்த பின் பாக்கெட்டில் 3 தலைவர்களின் புகைப்படங்களை வைத்திருந்தபோது விஜய் என்னை அழைத்தார். அம்மா படத்தையே நீங்க வச்சிக்கோங்க... அதுதான் எனக்கு மகிழ்ச்சி என விஜய் கூறினார். எந்த தலைவர் இப்படி கூறுவார்? ஜனநாயகம் காட்டப்படும் என்ற வரலாற்றை படைப்போம்” என்றார்.