"விஜய் தனித்தே நிற்பார்"- செங்கோட்டையன்
Jan 22, 2026, 15:04 IST
234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும், தவெக தலைவர் விஜய் கை காட்டுபவரே வெற்றி வேட்பாளர் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “ என்னை பொறுத்தவரையில் MGR, ஜெயலலிதா போலவே விஜய்யும் ஒரு பெரும் தலைவர். தவெக தலைவர் விஜய் தனித்தே நிற்பார். அவருக்கான கூட்டணி அமையும். ஒருபுறம் 10 கட்சிகள் கூட்டணி, மற்றொருபுறம் 8 கட்சிகள் கூட்டணி. எத்தனை கட்சிகளை கூட்டணியில் வைத்திருந்தாலும், கூட்டணிக்காக கெஞ்சி வருகின்றனர். 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும. தவெக தலைவர் விஜய் கை காட்டுபவரே வெற்றி வேட்பாளர்.