×

“எதிர்காலத்தில் தமிழ்நாட்டை ஆளும் திறன் கொண்ட ஒரே தலைவர் விஜய்தான்”- செங்கோட்டையன்

 

26ம் தேதி முதல் அனைத்து மாவட்டத்திற்கும் த.வெ.க சுற்றுப்பயணம் தொடங்கும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் நான் மிகத் தெளிவாக கூறுகிறேன். எதிர்காலத்தில் தமிழ்நாட்டை ஆளும் திறன் கொண்ட ஒரே தலைவர் விஜய்தான். பல தலைவர்கள் வந்ததையும் சென்றதையும் பார்த்துள்ளேன். பல இயக்கங்கள் எழுந்ததையும் வீழ்ந்ததையும் கண்டுள்ளேன். ஆனால் இன்றைய இந்த இயக்கம், சாதாரண அரசியல் கட்சியாக அல்ல. நம்மை அனைவரையும் ஒரே குடும்பமாக இணைக்கும் ஒரு இயக்கமாக உருவெடுத்துள்ளது.இந்த இயக்கம் வளர முடியாது, இதில் யாரும் நுழைய முடியாது, இது நீண்ட காலம் நிலைக்காது என சிலர் பேசுகின்றனர். இப்படியான விமர்சனங்களை நான் என் அரசியல் வாழ்நாளில் பலமுறை கேட்டிருக்கிறேன். கடந்த காலத்திலும் மகத்தான தலைவர்களைப் பற்றி இதே வார்த்தைகளே பேசப்பட்டன. இன்று நான் உறுதியாகக் கூறுகிறேன். விஜய் அரசியலில் இருக்கும் வரையில், எதிர்கால முதல்வர் அவரே. கூட்டணி கணக்குகளாலும், பொய்யான செய்திகளாலும் இதை மாற்ற முடியாது.

நான் செல்லும் இடமெல்லாம் இதற்கு முன் என் அரசியல் வாழ்க்கையில் கண்டிராத ஒரு மாற்றத்தை காண்கிறேன். மருத்துவர்கள், இளைஞர்கள், பிற கட்சிகளை ஆதரித்த குடும்பங்கள் அனைவரும் தமிழ்நாடு விஜயின் தலைமையில் நல்ல பாதைக்கு செல்லும் என நம்பிக்கையுடன் பேசுகின்றனர். அரசியல் மற்றும் மத வேறுபாடுகளைத் தாண்டி மக்கள் ஒன்றிணைவதை இன்று கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்த மாற்றம் ஆழமானதும் உண்மையானதும் ஆகும்.பல தேர்தல்களை எதிர்கொண்டு வெற்றிபெற்ற அனுபவம் கொண்ட ஒருவராக நான் அறிந்திருக்கிறேன். இது வரலாறு படைக்கும் ஒரு இயக்கம். இன்று அவருடன் நிற்பவர்கள் வெறும் ஆதரவாளர்கள் அல்ல நாளைய தமிழ்நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் பொறுப்பை ஏற்கும் சக்திகளாகவே அவர்கள் இருக்கிறார்கள்.
 
தலைவரின் பிரச்சாரத்திற்கு இடமும் ரெடி பண்ணிட்டு இருக்கோம். கூடிய விரைவில் காவல்துறை அனுமதியோட அதுக்கான பயணத்த திட்டங்கள் கூடிய விரைவில் தொடங்கும்.இப்ப சில விதிமுறைகள் இருக்கு.விதிமுறைக்கு ஏற்ப இடங்கள் வேண்டும்.இடங்களை முதலில் தேர்வு செய்யணும்.அதுக்கப்புறம் காவல்துறை அனுமதி வேணும்.காவல்துறை கண்டிஷன்ஸ் எல்லாம் நாங்க ஃபுல்பில் பண்ணனும். அதுக்கு ஒரு டைம் வேண்டி இருக்கு. அதை எல்லாமே நாங்க பார்த்துட்டு இருக்கறோம். சக்சஸ் ஃபுல்லா முடிச்சுக்குவோம்.உங்களுக்கு ஒரே ஒரு எக்ஸாம்பிள் சொல்றேன்.2010 ல மூன்றே கூட்டம் தான் நடந்திருக்கு.கோவை, திருச்சி, மதுரை, மூன்று இடத்துல முடிச்சிட்டோம். ஞாபகம் இருக்குன்னு நினைக்கிறேன். வெற்றி என்பது ஒரு இலக்கை நோக்கி.மக்கள் செல்வாக்கை நோக்கி. பணமே கொடுக்காமல் மக்கள் கூடுகிற ஒரே தலைவர் நம்முடைய தளபதிதான். ஆகவே நீங்க அதை பத்தி கவலைப்பட வேண்டாம்