×

“மக்கள் சக்தியால் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார்’’- செங்கோட்டையன்

 

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில்  அதிமுகவில் இருந்து 100க்கும் நூற்றுக்கும் மேற்பட்டோர் விலகி தமிழக வெற்றி கழகத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து செங்கோட்டையன் வரவேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.ஏ.செங்கோட்டையன், “அணி அணியாக தமிழக வெற்றிக் கழகத்தில் பலரும் இணைய இருக்கிறார்கள். தமிழக வெற்றி கழகம் மக்கள் சக்தியாக எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும். வரும் 18ஆம் தேதி பெருந்துறையில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.  காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணிக்குள் அந்த நிகழ்வு நடைபெற உள்ளது.  மக்கள் முழுமையாக அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் நிகழ்வாக பெருந்துறை விஜயமங்கலத்தில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. தவெக விருப்ப மனு பெறுவது குறித்த தேதியை தலைவர் அறிவிப்பார். வேட்பாளர் பட்டியலுக்கு முன்பாக மனுக்கள் பெறப்படும், அதன் பின் வேட்பாளர்களை தலைவர் முடிவு செய்வார்.

தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் விஜயின் பொதுக்கூட்டம் ஈரோட்டில் நடைபெறும். அனைவரும் பாராட்டும் வகையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இன்னும் பல்வேறு கட்சிகளில் இருந்து தவெகவில் தொண்டர்கள் இணைய உள்ளனர். தேர்தல் களம் என்பது எப்படி இருக்கும் என யாராலும் கணிக்க முடியாது. யாருடன் யார் கூட்டடணி என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தவெகவிற்கு போட்டியாக யாரும் இல்லை, மக்கள் சக்தி இருக்கிறது. தனிப்பட்ட முறையில் யாரும் போட்டி என சொல்ல முடியாது. மக்கள் சக்தியால் விஜய் முதலமைச்சராவார்” என்றார்.