×

“நீங்க எத்தன ஆயிரம் கொடுத்தாலும் இந்த 5 ரூபா விசிலு உங்க கதைய முடிக்கப்போகுது”- ராஜ்மோகன்

 

சேப்பாக்கத்தில் ஒலிக்கும் விசிலை தடை செய்யலாம் தமிழ்நாடு முழுவதும்  விசிலை ஒன்றுமே செய்ய முடியாது  என தவெக துணை பொது செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் தவெக இளைஞரணி சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. ராயபுரம் காளிங்கராயன் தெருவில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் தவெக துணை பொது செயலாளர் ராஜ்மோகன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேசிய ராஜ்மோகன், “ஆயிரம் அவதூறுகளை நம் மீது அள்ளி வீசுவார்கள் ரோட்டில் செல்லும் பொழுது ஏதோ ஒன்று பார்த்து நம்மை குறைக்கிறது. அதுக்கு பதில் கொடுத்து பேசிக் கொண்டிருப்போமா? நாம் அடைய வேண்டிய லட்சியங்கள் அதிகம் உள்ளது. கல்லடி விழும் சொல்லடி விழ தான் செய்யும். இதையெல்லாம் கண்டும் காணாமல் செல்ல வேண்டும். நாம எதுவும் செய்ய வேண்டாம் செய்ய வேண்டிய வேலையை தேர்தலின் போது தாய்மார்கள் செய்து விடுவார்கள். சிவகங்கை மாவட்டத்தில் திமுக கவுன்சிலர் தூய்மை பணியாளர்களை விசில் ஊதக்கூடாது.

தூய்மை பணியாளர்களை விசிலுக்கு பதில் ஒலிபானை பயன்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையெல்லாம் தேர்தலின் போது மக்கள் திமுகவை ஒழிப்பான் அராஜக ஆட்சியை ஒழிப்பான். ஐபிஎல் போட்டியில் விசில் ஊதக்கூடாது தூய்மை பணியாளர்கள் விசில் ஊதக்கூடாது. நான்கரை ஆண்டு வருடத்தில் 27 பேரை காவல் நிலையத்தில் வைத்து கொலை செய்து உள்ளார்கள். இனிய இரவு முடிய வேண்டும், இரவு பகலாய் தொடர வேண்டும். புதிய தமிழகம் விடிய வேண்டும் அதற்கு தளபதி விஜய் தான் 2026 ல் முதலமைச்சராக வேண்டும். 2026ல் இரண்டே கட்சிகளுக்கு மட்டுமே போட்டி. தவெக தூய சக்தி திமுக தீய சக்தி. சாமாலியன் சின்னம் தொழிலாளர் சின்னம், ஏழைகளின் சின்னம், தமிழர்களின் சின்னம், பாதுகாவலர்கள் சின்னம், காவலர்களின் சின்னம், விசில்  சின்னம். சேப்பாக்கத்தில் ஒலிக்கும் விசில் சத்தத்தை தடை செய்யலாம். ஆனால் தமிழ்நாடு முழுவதும் விசிலை ஒன்றுமே செய்ய முடியாது நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும். நீங்க எத்தன ஆயிரம் கொடுத்தாலும் இந்த 5 ரூபா விசிலு உங்க கதைய முடிக்கப்போகுது” என்றார்.