என் காலில் விழுந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்- புஸ்ஸி ஆனந்த்
யாரும் என் காலில் விழ வேண்டாம் அப்படி செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தவெக தலைவர் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் நெமிலிச்சேரியில் தவெக சார்பில் நடைபெற்ற நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் உரையாற்றிய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “மகளிருக்கு ரூ.1000 Government கொடுக்கிறது. ஆனால் என் கணவன் கூடா நான் வெளியில் போனால் லைசன்ஸ் இல்லை, ஹெல்மெட் இல்லைனு அபராதம் போட்டு அந்த ஆயிரம் ரூபாயை வாங்கிடுறாங்கள். வாகனம் ஓட்டும்போது லைசன்ஸ், ஹெல்மெட் இல்லை என்பதற்காக போலீஸ் பிடித்து அபராதம் போட்டால், நீங்கள் போலீஸ் மீது கோபப்பட கூடாது, அரசு மீதுதான் கோபப்பட வேண்டும். யாரும் என் காலில் விழ வேண்டாம் அப்படி செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தளபதியை தாண்டி எங்களுக்கு எதுவும் தெரியாது... உயிர், மூச்சு, நாடி அனைத்தும் தளபதி தான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கடந்த 32 ஆண்டுகளாக தளபதிக்காக பொதுமக்களுக்கு சேவையாற்றிக்கொண்டிருக்கும் கட்சி தவெக. தளபதி சொல்வதெல்லாம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றுதான்...” என்றார்.