×

“வரும் 12 ஆம் தேதி மாபெரும் போராட்டம்”- தவெக திடீர் அறிவிப்பு

 

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை தமிழக வெற்றிக் கழகம் முன்னெடுக்க உள்ளது.

 

வருகிற மார்ச் 12-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு போதை பொருட்களை தடுக்க தவறியதாக திமுக அரசை கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் போராட்டம் நடத்த உள்ளனர். இதில் சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் நெருங்கி வருவதால் விஜய் அடுத்தடுத்து நிர்வாகிகளை சந்திப்பை நடத்தி வரக்கூடிய நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்து திட்டமிட்டுள்ளது தமிழக வெற்றி கழகம்.