☰
×

த.வெ.க. பிரமுகர் லீலை! காரில் லிப்ட் கேட்டு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை!

 

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி, தனது தோழியான த.வெ.க. பெண் நிர்வாகியுடன் கல்லூரி முடிந்து ஊருக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது, தக்கலை அருகே உள்ள மருந்துக்கோட்டையைச் சேர்ந்த த.வெ.க. பிரமுகர் கிறிஸ்டோபர் (50 வயது) தனது காரில் வந்து அவர்களுக்கு 'லிப்ட் கொடுத்துள்ளார். மூலச்சல் பகுதியில் பெண் நிர்வாகி இறங்கியதும், மாணவியை மட்டும் காரில் தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது வழியில் மழை பெய்ததால் கார் கண்ணாடியைத் துடைப்பதாகக் கூறி மாணவிக்கு கிறிஸ்டோபர் திடீரென பாலியல் தொந்தரவு கொடுக்க, அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும், இந்த விவகாரத்தை தோழியிடம் சொல்வேன் என கூறி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பயந்துபோன கிறிஸ்டோபர் மாணவியிடம் மன்னிப்பு கேட்டார்.

இதுகுறித்து மாணவி தனது தோழியிடம் தெரிவிக்க, அவர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் தற்போது கிறிஸ்டோபர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.