×

"அநியாயம் நடக்குது தளபதியே.."- பனையூர் தவெக தலைமை அலுவலகம் உள்ளேயே போராட்டம்

 

பனையூரில் உள்ள தவெக அலுவலகம் உள்ளேயே போராட்டம் நடத்திய தவெகவினரால் பரபரப்பு ஏற்பட்டது. 


பனையூரில் உள்ள தவெக அலுவலகம் உள்ளேயே போராட்டம் நடத்திய தவெகவினரால் பரபரப்பு ஏற்பட்டது. அதுமட்டுமின்றி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றாக திரண்டு அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். ஆதவ் அர்ஜுனாவின் புகைப்படத்தை பேனரில் பயன்படுத்தியதற்காக வட்டச் செயலாளரை கட்சியில் இருந்து நீக்கியதாக திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் மீது குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியில் பதவி தருவதாக பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளதாகவும் அவர்கள் கோஷம் எழுப்பினர். ஆகவே திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டனை நீக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர். தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் இல்லாததால் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்த தவெகவினர், மணிகண்டன் பணம் பெற்றுகொண்டு தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் பதவிகளை தருவதாக புகார் கூறியுள்ளனர்.