“நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்க”- தவெகவினரின் பரபரப்பு போஸ்டர்
தவெக தலைவர் விஜய் கேள்வி கேட்பதுபோல் அமைச்சர் ஐ.பெரியசாமியை கேள்வி கேட்டு ஆத்தூர் தொகுதி தவெக நிர்வாகிகள் ஒட்டியுள்ள போஸ்டரால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி அமைச்சர் ஐ. பெரியசாமி தொகுதியான சின்னாளப்பட்டி பேரூராட்சி, கலிக்கம்பட்டி, கோட்டப்பட்டி, சாமியார்பட்டி மற்றும் பாளையங்கோட்டை ஊராட்சிகளில் சாலை, சாக்கடை மற்றும் பாலங்கள் புதிதாக அமைப்பதற்க்கு டெண்டர் முறையில் ஒப்பந்தகாரரிடம் பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலங்களில் உள்ள அரசு அதிகாரி மூலம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் டெண்டர் எடுத்த ஒப்பந்தக்காரர்கள் அவரது பணிகளை செய்யாமல் அரசு மக்கள் நலன்காக ஒதுக்கிய நிதியில் ஊழல் செய்து சாலைகள், சாக்கடைகள் போடாமலே கணக்கு காட்டியும் ஒரு சில பகுதியில் தரமற்ற சாலை மற்றும் பாலங்கள் அமைத்து பொதுமக்கள் அன்றாட போக்குவரத்துக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படும் வகையில் வேலை செய்துள்ளனர்.
இத்தனை பிரச்னைகள் ஆத்தூர் தொகுதியில் இருக்கும் நிலையில் அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் அதை கண்டுகொள்ளாமளும் ஊழல் செய்தவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கை எடுக்காமலும் இருப்பதாக தெரிகிறது. இதனால் பொதுமக்கள் கோரிக்கையாக இந்த மக்கள் பிரச்னையை தவெக ஆத்தூர் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் ஐ. பெரியசாமியிடம் த.வெக., தலைவர் விஜய் கேள்வி கேட்பது போல் ஆத்தூர் தொகுதி சின்னாளபட்டி பேரூராட்சி பகுதிகளில் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.