×

தவெக துண்டை தூக்கி போட்டு திமுக துண்டை கழுத்தில் போட்டுக்கொண்ட தவெகவினர்

 

சென்னை திருவொற்றியூரில் "உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை" எனக் குற்றம்சாட்டி ஏராளமான த.வெ.க இளைஞர்கள் த.வெ.க. துண்டை தூக்கி போட்டு தி.மு.க. துண்டை கழுத்தில் போட்டுக்கொண்டனர்.

சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர், அக்கட்சியில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி பகுதி செயலாளர் தனியரசு தலைமையில் திமுகவில் இணைந்தனர். இளைஞரணி பொறுப்பாளர் உள்ளிட்ட பல நிர்வாகிகளும் த.வெ.கவில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர். த.வெ.கவில் உழைப்பை மட்டும் சுரண்டி கொண்டு, மரியாதை கொடுப்பதில்லை என்றும் இளைஞரணி பொறுப்பாளர் வேதனையுடன் கூறியுள்ளார்.