×

“புஸ்ஸி ஆனந்த் சாதி, பணம் பார்த்து கட்சியில் பதவி தருகிறார்... எங்களை நாய் மாதிரி நடத்துறாங்க”- தவெக நிர்வாகி குற்றச்சாட்டு
 

 

ஆரணியில் த.வெ.க பதவிக்கு ஜாதி மற்றும் பணம் அடிப்படையில் பொதுச் செயலாளர் புஸ்ஷி ஆனந்த் பதவி வழங்குவதாக தவெகவை நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடிகர் விஜயின் தவெக கட்சியில் தற்பொழுது மாவட்ட செயலாளராக செய்யார் பகுதியைச் சேர்ந்த சத்யா என்பவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த மாவட்ட செயலாளர் பதவி அறிவிக்கப்பட்ட பின்பு தவெக தலைமைக்கு எதிர்ப்புகள் வலுத்துவருகின்றன.

இந்நிலையில் ஆரணி டவுன் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் என்பவர் ஓவியராக பணியாற்றி வருகிறார்.இவர் கடந்த 12 ஆண்டுகளாக நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தில் ஆரணி இளைஞரணி துணைச் செயலாளராக பதவி வகித்துள்ளார். தற்பொழுது நடிகர் விஜய்யின் தவெக கட்சியில் மாவட்ட வாரியாக பதவிகள் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளராக செய்யாறு சேர்ந்த சத்யா என்பவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.இதற்கு ஆரணி பகுதியில் நேரடியாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் கடும் எதிர்ப்புகள் வெளிவந்துள்ளன.