×

சேலத்தில் விவசாயி மீது தவெக நிர்வாகி கொலைவெறி தாக்குதல்! பதைபதைக்க வைக்கும் வீடியோ

 

சேலத்தில் விவசாயி மீது தவெக நிர்வாகி கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தாரமங்கலம் அமரகுந்திமேல் தெரு

போர்வெல் பணியில் ஈடுபடும் பொழுது பாறையின் துகள் அதிக அளவில் வந்ததால் பொதுமக்களை தாக்கும் TVK நிர்வாகி முத்து கண்ணன் தாக்கும் வீடியோ காட்சி. pic.twitter.com/JSPj35gKqL

— எர்ணாவூர் க.சோழன் (@chozhanG230580) June 14, 2026


சேலம் மாவட்டம் தாரமங்கலம் அமரகுந்தி பகுதியைச் சேர்ந்த விவசாயி அருணாச்சலம் (62). தனது நிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை விவசாயத்திற்காக போர்வெல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது பாறைகளின் துகள் அருகில் இருந்த தவெக நிர்வாகி முத்தண்ணன் வீட்டின் மேல் படிந்துள்ளது. இதனை காரணமாக கொண்டு முத்தண்ணன் தனது தந்தை பரந்தாமன், சகோதரர் சந்திரமோகன்  உள்ளிட்டோர் குடும்பத்துடன் விவசாயி அருணாச்சலம் மற்றும் அவரது மனைவி வசந்தா தம்பதியினரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த விவசாய தம்பதியினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பாக புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.  இதனிடையே தாக்குதல் சம்பவம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.