☰
×

தவெக ஒன்றிய செயலாளர் கருப்புசாமிக்கு கட்சி தலைமை நோட்டீஸ்

 

காரமடை ஒன்றிய செயலாளர் கருப்புசாமி மீது தவெக பெண் நிர்வாகி பாலியல் புகார் அளித்த விவகாரத்தில்  தவெக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

தவெக ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அக்கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் நேற்று கோவை ஆட்சியரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டதை அடுத்து, டிஎஸ்பி-யான பாஸ்கர் தலைமையிலான போலீஸார் பெண் நிர்வாகியின் வீட்டிற்கே நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதனையடுத்து கருப்பசாமி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.   தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் காரமடை ஒன்றிய செயலாளர் கருப்புசாமி மீது தவெக பெண் நிர்வாகி பாலியல் புகார் அளித்த விவகாரத்தில்  தவெக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாலியல் புகார் குறித்து 10 நாட்களுக்குள் தகுந்த விளக்கமளிக்க தவெக ஒன்றிய செயலாளர் கருப்புசாமிக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.