ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி மன்ற தலைவர்
மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரலாகிவருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியில் வீரா (எ) வீராசாமி கடந்த 2021 நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு, 300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மாம்பாக்கம் ஊராட்சியில் சுயேட்சையாக தனித்து நின்று வெற்றி பெற்று பின்பு, வீரா (எ) வீராசாமி திமுக கட்சியில் இணைத்துக் கொண்டார். கடந்த 4 மாதத்திற்கு முன்பு மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீரா திமுகவில் இருந்து, விலகி விஜய் புதிதாக துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
லஞ்சம் வாங்கும் தூய சக்தி :
— Aaron isaac - My Forever CM is MK.Stalin (@3_Aaron) July 14, 2026
மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்.
இது ஊழல், லஞ்சம்-ல வராது, families. இது ஊக்கத்தொகை. அபரபடிதானடா தற்குறீஸ் ?? @TVKVijayHQ… pic.twitter.com/x0vCVLE8NS
இந்நிலையில் ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன் என்று கூறி வரும் நிலையில், மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரலாகிவருகிறது. "மக்கள் பணத்தைத் தொடமாட்டோம்; தொடுபவர்களை விடமாட்டேன்" என்று விஜய் பேசினார் என்பது குறிப்பிடதக்கது.