×

”ரத்தீஷ் என்ற பவர் புரோக்கர் மூலம் திமுக அரசை நடத்தியது"- நிர்மல்குமார்

 

கம்யூனிஸ்டுகள் தவெக அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவருவதாக அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “மிசா தொடர்பாக அதிக விவாதங்கள் நடந்து விட்டது. திமுக செய்த துரோகங்கள் தவறுகளில் இருந்து தமிழ்நாட்டை எப்படி மாற்றி வருகிறோம் என்று சொல்லித்தானே ஆகவேண்டும். எவ்வளவு தூரம் அரசு துறையை கெடுத்து வைத்து இருக்கிறார்கள் என்று மக்களுக்கு தெரிய வேண்டும். கம்யூனிஸ்டுகள் தவெக அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவருகின்றன. ரத்தீஷ் என்ற பவர் புரோக்கர் மூலம் அரசை நடத்தியது திமுக. அவர்கள் செய்த தவறுகள் குறித்து சொல்லித்தான் ஆக வேண்டும். 3 தலைமுறை அரசியல் செய்தும், திமுக மக்களுக்கு என்ன செய்திருக்கிறது? புரையோடி போன சிஸ்டத்தை மாற்றுகிறோம் என்று மக்களுக்கு தெரிவித்தாக வேண்டும். ரத்தீஷ் என்ற தனிநபர் அரசை வழிநடத்தியதை எப்படி ஏற்க முடியும்? ரத்தீஷ் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை விசாரித்து வருகிறது. அரசுக்கு புத்துயிர் கொடுத்து பிரச்சினைகளை சரிசெய்து வருகிறோம். அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தவர்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார்” என்றார்.