☰
×

"திமுக இப்போது அம்மணமாகிவிட்டது"- நாஞ்சில் சம்பத் 

 

தொகுதி மறுவரையறையை திமுக ஆதரிப்பதன் மூலம், ஏற்கெனவே அலங்கோலமாகிவிட்ட திமுக இப்போது அம்மணமாகிவிட்டது என தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார். 

தொகுதி மறுவரையறையை @arivalayam ஆதரிப்பதன் மூலம், ஏற்கெனவே அலங்கோலமாகிவிட்ட திமுக இப்போது அம்மணமாகிவிட்டது. தொகுதி மறுவரையறையின் மூலம் சங் பரிவாரங்களின் சதியரசியலுக்குச் சாமரம் வீசுகிறது திமுக.

அமித் ஷாவின் அரண்மனையில் அறிவாலயத்தின் ஆசாடபூதிகள் போய் நிற்பதைக் கண்டு…

— Nanjil Sampath (@NanjilPSampath) November 29, 2026


இதுதொடர்பாக நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தளத்தில், "தொகுதி மறுவரையறையை திமுக ஆதரிப்பதன் மூலம், ஏற்கெனவே அலங்கோலமாகிவிட்ட திமுக இப்போது அம்மணமாகிவிட்டது. தொகுதி மறுவரையறையின் மூலம் சங் பரிவாரங்களின் சதியரசியலுக்குச் சாமரம் வீசுகிறது திமுக. அமித்ஷாவின் அரண்மனையில் அறிவாலயத்தின் ஆசாடபூதிகள் போய் நிற்பதைக் கண்டு விலங்குகள்கூடப் பின்பொறியால் சிரிக்கின்றன.

தொகுதி மறுவரையறை தேர்தல் வரைபடத்தை மட்டுமல்ல, அரசியல் எல்லையையும் தலைகீழாக மாற்றும். தேர்தல் மறுவரையறை மாநில உரிமைகளைப் பறிக்கும்; இது ஏகபோக ஆட்சிக்கு வித்திடும்! கனிமொழியே பாரதிய ஜனதாவின் மொழியில் பேசுவது விந்தையாக இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.