×

"முதலமைச்சர் என வாயால் சொன்னால் மட்டும் போதாது"- என்.ஆனந்த்

 

234 தொகுதிகளிலும் விஜயால் ஜெயிக்க முடியும் என பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

மாமல்லபுரத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றிய பொதுச்செயலாளர் என்.ஆனந்த், “234 தொகுதிகளிலும் விஜயால் ஜெயிக்க முடியும். ஆனால் ஒரு நபர் மூன்றில் இருந்து நான்கு தொகுதியில் வரை மட்டுமே போட்டியிட முடியும். எனவே விஜய் யாரை கை காண்பிக்கிறாரோ அவர் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். அறிவித்த 5 நிமிடங்களில் சின்னத்தை சுவரில் வரைந்த ஒரே கட்சி தவெக. தமிழ்நாட்டில் உள்ள 12,497 கிரமாங்களிலும் விசில் சின்னம் வரைந்துள்ளோம்.

2026-ல் நாம் ஜெயிச்சே ஆக வேண்டும். முதலமைச்சர் என்பது வாயால் சொன்னால் மட்டும் போதாது. நமது உழைப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும். பூத்தில் கடைசி நேரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளதால், தவெகவினர் பூத்தில் இறுதி வரை இருக்க வேண்டும். நமக்கு முகமே தலைவர் தளபதி தான். மக்களுக்காக உச்சத்தை விட்டுவிட்டு வந்திருக்கிறார். கோடிகளெல்லாம் வேண்டாம். விஜய் முகம் பொறித்த கொடி மட்டும் போதும். இனிமேல் நம்மை பற்றி மட்டும் தான் பேசுவார்கள். 2026-ல் தவெக தலைவர் விஜய்தான் முதலமைச்சராக அமர்வார்” என்றார்.