“வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது! விஜய் முதல்வராக பதவியேற்பார்”- என்.ஆனந்த்
May 3, 2026, 11:52 IST
தவெகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கூறியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்
செய்தார். பின்னர் நந்தியின் காதில் ரகசியம் கூறி வேண்டினார் புஸ்ஸி ஆனந்த். சட்டமன்றத் தேர்தலில் தவெக மாபெரும் வெற்றி பெற வேண்டி, காலசம்ஹார மூர்த்தி மற்றும் அபிராமி அம்மனை தரிசித்த அவர், பின்னர் கொடிமரம் அருகே தீபமேற்றி பிரார்த்தனை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த். “தவெகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தலைவர் விஜய் கண்டிப்பாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்பார்’’ என்றார்.